Friday, 18 June 2021

head phone Using tips

காதுகளில் ஹெட்போன் அதிக நேரம் உபயோகிப்போருக்கான விழிப்புணர்வு பதிவு!!!!

இன்றைய உலகில் பெரும்பாலும் ஹெட்போன் உபயோகிப்போரின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது, அதேபோல மார்க்கெட்டிலும் அதிகமான நிறுவனங்களும் ஹெட் போன்களை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது, தங்களின் பொழுதுபோக்கிற்காக விளையாட்டாக பயன்படுத்தும் ஹெட் போன்களினால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகின்றது என்பதை யாரும் உணர்வதில்லை நாளடைவில் தான் அதன் பாதிப்பை உணர்கின்றனர்.

நமது காதுகளால் 65 டெசிபெல் வரை ஒரு ஒலியை தாங்க முடிகிறது, ஆனால் நாம் பயன்படுத்தும் ஹெட் போனின் ஒலி குறைந்தது 100 டெசிபெல் ஆகும். அதாவது 100 டெசிபெல் தொடர்ச்சியாக 10 மணி நேரத்திற்கு மேல் நாம் ஹெட் போனில் ஒலியை கேட்டால், நாம் காது கேளாத நிலையை அடைந்துவிடும்.

நாம் ஹெட்போன் பயன்படுத்துவதினால் நம் காதுகளில் உள்ள செல்களின் மீது மிகவும் தவறான தாக்கத்தை எதிர்கொள்கிறோம். ஹெட்போனை அதிக நேரம் வரை நாம் உபயோகிப்பதால் நம் காதுகளில் உள்ள செல்கள் சிதைகின்றன..அதே போல வேகமாக பாக்டீரியா தொற்றுகள் ஏற்படுகின்றன...

தொடர்ந்து ஹெட்போன் கேட்பதால் சிந்திக்கும் திறன், ஞாபக சக்தி குறையும். ஹெட்போனுக்கு அடிமையானவர்களுக்கு ‘ஆடிட்டரி ஹாலுசினேஷன்‘ என்ற மனநோய் வரும். இதனால் அவர்களுக்கு ஹெட்போனை கழற்றிய பிறகும் பாடல்கள் ஒலிப்பது போலவும், யாராவது பேசுவது போலவும் இருக்கும்.

ஹெட்போன் பயன்படுத்துவதினால் தலைவலி, தூக்கமின்மை, மற்றும் மன அழுத்தம் போன்றவற்றினாலும் நாம் பாதிப்படைகின்றோம், நீங்கள் இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கிறீர்கள் என்றால் ஹெட் போன் பயன்பாட்டை தவிர்த்துக்கொள்ளுங்கள்!!!!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.