Monday, 25 November 2013

Aarushi-Hemraj murder: Talwars 'hurt, anguished' over their conviction

Aarushi-Hemraj murder: Talwars 'hurt, anguished' over their conviction
புதுடில்லி : நாட்டை உலுக்கிய 13 வயது சிறுமி ஆருஷி கொலை செய்யப்பட்ட வழக்கில் காசியாபாத் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், பெற்றோரே குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிபதி, தண்டனை அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என கூறி உள்ளார். தீர்ப்பை அடுத்து இருவரும தஸ்னா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீர்ப்பை கேட்டது்ம, தல்வார் கதறி அழுதார்.
டில்லியில் புறநகர் பகுதியான நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ராஜேஷ் தல்வார்-நுபுர் தல்வார் தம்பதி. பல் மருத்துவர்களான இவர்களின் ஒரே மகள் ஆருஷி. பள்ளி மாணவியான ஆருஷி 2008ம் ஆண்டு மே மாதம், தனது அறையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இருந்தார்.

இந்த கொலைக்கு வீட்டின் வேலைக்காரர் ஹேம்ராஜே காரணம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால் தலைமறைவானதாக கூறப்பட்ட ஹேம்ராஜின் உடல் வீட்டில் மாடியில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் ஆருஷியின் தந்தை ராஜேஷ் தல்வார் கைது செய்யப்பட்டார். சி.பி.ஐ. கோர்ட்டில் நடத்தப்பட்ட விசாரணையில் தல்வாருக்கு எதிரான நேரடி ஆதாரங்கள் ஏதும் சமர்பிக்கப்படவில்லை. இதனால் இவ்வழக்கை முடிக்கலாம் என, சி.பி.ஐ., கோர்ட்டில் கூறியது.

சி.பி.ஐ., கோர்ட் உத்தரவு: அதை ஏற்க மறுத்த சி.பி.ஐ., கோர்ட், இந்த வழக்கு குறித்து மீண்டும் விசாரிக்குமாறு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீண்ட விசாரணைக்கு பின், தல்வார் தம்பதியரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள் இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மகள் ஆருஷி மற்றும் ஹேம்ராஜ் ஆகியோரின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, இருவரும் சேர்ந்து, மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்தி மற்றும் கோல்ஃப் மட்டை ஆகியவற்றை பயன்படுத்தி ஆருஷியையும், ஹேம்ராஜையும் கொலை செய்தது தெரிய வந்தது.

ஐந்தரை ஆண்டுகள் விசாரணை: ராஜேஷ் தல்வார் 2008ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, 2 மாத விசாரணைக்கு பின், அவருக்கு எதிராக ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜராவதை தொடர்ந்து தவிர்த்து வந்ததால் நுபுர் தல்வார் 2012ம் ஆண்டு கோர்ட் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டார். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் ஐந்தரை ஆண்டுகள் நடத்தப்பட்ட இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், பெற்றோரே குற்றவாளிகள்
என தீர்ப்பளித்த நீதிபதி சியாம்லால், தண்டனை குறித்த அறிவிப்பு நாளை அறிவிக்கப்படும் என்று கூறினார்.

The duo was convicted for the murders as well as for destruction of evidence among other offences. Both of them were taken into custody after the verdict and sent to Dasna jail.
Rajesh Talwar also convicted for filing a wrong FIR with Noida police. While he has been convicted under the Indian Penal Code Sections 201 (causing disappearance of evidence of offence, or giving false information to screen offender), 203 (giving false information in respect to an offence committed), 302 (murder) and 34 (acts done by several persons in furtherance of common intention) his wife Nupur has been found guilty under Sections 201, 302 and 34. Breaking news,live news,court news,judgement,crime,murder


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.