senkottahi-punaloor Brod gauge work getting late
செங்கோட்டை - புனலுார் அகல ரயில்பாதை திட்டத்திற்கு, போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால், பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தின் நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் இருந்து, கேரள மாநிலம், புனலுாருக்கு, 49 கி.மீ., தூர ரயில் பாதையை ஏற்படுத்த, 1873ல், அப்போதைய ஆங்கில அரசால் முடிவு எடுக்கப்பட்டது. அதற்கு, சென்னை மாகாண அரசு, 17 லட்சம் ரூபாய்; ரயில்வே துறை, 7 லட்சம் ரூபாய், திருவிதாங்கூர் அரசு, 6 லட்சம் ரூபாய் வழங்கின. இந்த ரயில் பாதையை ஏற்படுத்த, 21 ஆண்டுகள் ஆனது. 1902 ஆண்டு முதல் ரயில் பாதை, மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
இந்த ரயில் பாதை, தமிழக பகுதிக்குள், 13 கி.மீ., கேரள பகுதிக்குள், 36 கி.மீ., என, அமைந்துள்ளது. தமிழக எல்லை பகுதிக்குள் உள்ள பகவதிபுரம் அருகே, 1 கி.மீ., தூரத்திலான குகைப்பாதையும்; கேரள பகுதிக்குள் உள்ள, நான்கு குகைப்பாதைகளும் முக்கியமானவை. 'மீட்டர் கேஜ்' பாதையை, அகலப் பாதையாக்கும் பணிகள், 2010ல், துவக்கப்பட்டன.இதற்காக, 375 கோடி ரூபாயில், பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. 120 சிறிய பாலங்களும், ஐந்து பெரிய பாலங்களும் உள்ளன. அகல ரயில் பாதைக்காக, பாலங்களை தற்போது விரிவுபடுத்தி, பலப்படுத்தும் பணியும், குகைப் பாதையை விரிவுபடுத்தும் பணியும் நடக்கிறது.இவ்வழித்தடம், தொன்மையான தென் பாண்டி நாட்டையும், தொன்மையான தென் சேர நாட்டையும் இணைக்கும் பாதையாக இருந்தது. இவ்வழித்தடத்தை பொறுத்தவரை, தமிழக, கேரள மக்கள் மட்டுமின்றி, சபரிமலை செல்லும் பக்தர்கள், வியாபாரிகள் பயன்பெறுகின்றனர். தமிழக பகுதியில் உள்ள குகை, ஏற்கனவே இருந்த அளவை விட, உயரத்திலும், அகலத்தில் கூடுதலாக, 1 மீ., விரிவுபடுத்தும் பணி நடக்கிறது.கடந்த மாதம், நிலச்சரிவு போல, குகைப்பாதையில் மண் சரிந்தது. குகைக்கு மேலே இருந்த நிலப்பரப்பில், இலகுவான பாறைகள் சரிந்து, ரயில் பாதையை மண் மூடியது. இதில், பாக்கு மரங்கள் மூழ்கும் அளவில், 50 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. எனவே, அவற்றையும் சரிசெய்யும் பணி நடந்து வருகிறது. குகைப்பணிகள் முடிவதற்கே, எட்டு மாதங்கள் வரை ஆகலாம்.இப்பணிகள் முடிந்த பின் தான், 'லைனிங்' - தண்டவாளம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என, தெரிகிறது. இதற்கிடையே, 'ஒப்பந்த நிதி போதாது' என, ஒப்பந்ததாரர்கள் விலகிச் செல்வதாலும், பணிகள் தாமதம் ஆகிறது.கேரளத்தில் குகைப்பணிகள் முடிந்துள்ள நிலையில், இங்கு பணிகள் முடிவடைய, இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம் என, தெரிகிறது.
நாடு முழுவதும், ரயில்வேயில் நிறைவேற்றப்படும், 120 திட்டங்களில், செங்கோட்டை - புனலுார் திட்டமும் ஒன்று. ஆனால், நிதிப்பற்றாக்குறையால், இந்த திட்டத்திற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. திட்டத்தின் மொத்த மதிப்பு, 375 கோடி ரூபாய் என, தெரிவிக்கப்பட்டாலும், 250 கோடி ரூபாய் இருந்தால் போதும்; திட்டத்தை முடித்து விடலாம்.ஆனால், 2010 முதல், ஒவ்வொரு ஆண்டு ரயில்வே பட்ஜெட்டிலும், 30 லட்சம் ரூபாய் என்ற விகிதத்தில் ஒதுக்கப்படுவதால், அடுத்தடுத்து பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது.வரும், 2015க்குள், பணியை முடிக்க திட்டமிடப் பட்டிருந்தது. ஆனால், நிதிப்பற்றாக்குறையால், மேலும் ஓர் ஆண்டு தாமதம் ஆகும்.
இதுகுறித்து, ரயில்வே துணைத்தலைமை பொறியாளர் அனந்தராமன் கூறியதாவது: இத்திட்டம் மிகவும் பழமையானது. ஆங்கிலேயர்கள், முழுக்க கற்களால் கட்டிய பாலத்தின் அழகு மாறாமல், கூடுதல் இணபை்பு பாலம் கட்டி வருகிறோம். 375 கோடி ரூபாய் திட்டமாக அறிவிக்கப்பட்டது; மூன்று ஆண்டுகள் ஆகியும், இதுவரை, 100 கோடி ரூபாய் தான் ஒதுக்கப்பட்டு உள்ளது.45 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. இன்னமும், 150 கோடி ரூபாய் தேவபை்படுகிறது. எனவே, கேரளாவை சேர்ந்த மத்திய அமைச்சர், கொடிக்குன்னில் சுரேஷ் போன்றவர்கள், பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.தமிழகத்தின் சார்பிலும், மத்திய அரசை கேட்டுக் கொள்ளும் முயற்சிகள் இருந்தால், கூடுதல் நிதி ஒதுக்கப்படலாம்.'யானபை்பசிக்கு சோளப்பொரி' போல எம்.பி.,எம்.எல்.ஏ.,க்களிடம் தொகுதி நிதி பெற்று, இத்திட்டத்தை நிறைவேற்ற இயலாது.எனவே, ரயில்வே துறையே, கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். ரயில்வே துறையை பொறுத்த வரை, இந்த திட்டம், 120 திட்டங்களில் ஒன்று. மாநில அரசுகள் முயற்சித்தால் மட்டுமே, இதே வேகத்தில் பணிகள் நடக்கும். வரும், 2015 இறுதிக்குள், பணி நிறைவடையும்.இவ்வாறு, அவர் கூறினார்.
ஆந்திரா, கர்நாடக அரசுகள், தங்கள் மாநிலத்தின் பிற்பட்ட பகுதிகளிலுள்ள முக்கிய புதிய ரயில் தடங்களுக்கு, ரயில்வே போர்டுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து, விரைவில் திட்டங்களை முடிக்கின்றன.டீசல் விலை நாளுக்கு நாள் கூடிக் கொண்டிருப்பதால், ஏழை, நடுத்தர மக்கள் நீண்ட தூரம் பஸ் பயணத்தைத் தவிர்க்கின்றனர். தமிழக அரசு இத்திட்டத்திற்கு, 150 கோடி ரூபாய் கொடுத்தால், தென் மாவட்ட மக்கள் பெரிதும் பயன் அடைவர்.நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஓடிக் கொண்டிருந்த ரயில் பாதையை, நீண்ட காலம் மூடியிருப்பது, அப்பகுதி மக்களுக்கு மிக்க வேதனையாக உள்ளது.
தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா, அக்., 29ம் தேதி, நெல்லை தென்காசி தடத்தில் உள்ள அம்பாசமுத்திரத்தில் ஆய்வு செய்தார். அப்போது அவர், 'செங்கோட்டை - புனலுார் அகல ரயில் பாதை திட்டத்திற்கு, மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால், பணிகள் நிறைவு பெற, இன்னும், ஐந்து ஆண்டுகள் தாமதமாகும்' என்று தெரிவித்து இருந்தார்.இது தென் மாவட்ட மக்களுக்கு கூடுதல் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் கிரானைட் கற்கள்; தூத்துக்குடியில், தாது மணல்; நெல்லை தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளை என, தென் மாவட்ட பகுதிகளில் உள்ள இயற்கை வளங்கள், ஏராளமான அளவில் கொள்ளையடிக்கப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, குறிப்பிட்ட சிலர் மட்டும் சட்ட விரோதமாக, பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு குவித்துள்ளனர்.இதை, மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல், மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளன.
அதே நேரத்தில், தென் மாவட்ட மக்களின் முக்கிய வழித்தடமான, செங்கோட்டை - புனலுார் ரயில் பாதைக்கு, மிகவும் சொற்ப அளவில், பணம் ஒதுக்க, அரசுகளுக்கு மனம் இல்லாதது, பெரும் குறையாக மக்கள் கருதுகின்றனர்.தென்பாண்டி நாட்டின் மக்கள், அதிகம் கல்வி கற்றவர்களாக இருப்பினும், அவர்கள் பிழபை்புத் தேட, வேறு மாநிலங்களுக்குச் செல்லும் வாய்ப்பையும்,கடந்த, 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த திராவிடக் கட்சிகள் அளிக்கவில்லை. காமராஜர் ஆட்சி இருந்திருந்தால், இந்த அவல நிலை, தென் மாவட்ட மக்களுக்கு ஏற்பட்டிருக்காது என்ற கருத்து, பரவலாக மக்களிடையே இருக்கிறது.தி.மு.க., ஆட்சி, சென்னை நகரைத் தான், வளர வழி செய்தது; நாங்குநேரி தொழிற்பேட்டைக்குத் திட்டம் இட்டும், அதை செயல்படுத்த எந்த முயற்சியும், தி.மு.க., ஆட்சியில் செய்யவில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.
இத்திட்டம் மிகவும் பழமையானது. ஆங்கிலேயர்கள், முழுக்க கற்களால் கட்டிய பாலத்தின் அழகு மாறாமல், கூடுதல் இணபை்பு பாலம் கட்டி வருகிறோம். 375 கோடி ரூபாய் திட்டமாக அறிவிக்கப்பட்டது; மூன்று ஆண்டுகள் ஆகியும், இதுவரை, 100 கோடி ரூபாய் தான் ஒதுக்கப்பட்டு உள்ளது.இதுவரை, 45 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. இன்னமும், 150 கோடி ரூபாய் தேவபை்படுகிறது. எனவே, கேரளாவை சேர்ந்த மத்திய அமைச்சர்,கொடிக்குன்னில் சுரேஷ் போன்றவர்கள், பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க கோரிக்கைவைத்துள்ளனர்
அனந்தராமன்ரயில்வே துணைத்தலைமை பொறியாளர்
- ந

நிதி பற்றாக்குறை:

5 ஆண்டு தாமதமா?

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.